0
2005ம் ஆண்டு பி.வாசு இயக்கத்தில், ரஜினி, பிரபு, ஜோதிகா, நயன்தாரா, நாசர், வடிவேலு கூட்டணியில் வெளிவந்த படம் சந்திரமுகி. சிவாஜி தயாரிப்பில் வெளிவந்த இப்படம் சூப்பர் – டூப்பர் ஹிட்டானது. வசூலையும் வாரி குவித்தது. தமிழில் அதிக வசூலை குவித்த படங்களில் சந்திரமுகிக்கும் தனி இடம் உண்டு. அதோடு இப்படத்தில் ஜோதிகாவின் நடிப்பு அனைவரையும் மிரட்டியது.
இதனிடையே கன்னடத்தில் இயக்குநர் பி.வாசு, சிவராஜ்குமார், வேதிகாவை வைத்து சிவலிங்கா என்ற த்ரில்லர் படத்தை இயக்கினார். இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில் இப்படத்தை தமிழில் சந்திரமுகி-2 என்ற பெயரில் ரீ-மேக் செய்ய உள்ளார் பி.வாசு. இப்படத்தில் ரஜினியை தான் முதலில் நடிக்க வைக்க எண்ணினார் வாசு, பிறகு லாரன்ஸிடம் இப்படம் பற்றி பேசி நடிக்க சம்மதம் வாங்கிவிட்டார்.
சந்திரமுகி-2வில் லாரன்ஸ் நடிப்பது உறுதியாகியுள்ளது. அதுமுட்டுமல்ல, இப்படத்தில் வடிவேலுவும் இணைய உள்ளார். சந்திரமுகியில் ரஜினி, ஜோதிகாவின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தாலும் அதையும் தாண்டி அப்படத்தில் இடம்பெற்ற வடிவேலுவின் காமெடி ரசிகர்களை கவர்ந்தது. அதன்படி இப்போது சந்திரமுகி-2விலும் வடிவேலு நடிக்க உள்ளார். அதேசமயம் ஹீரோயினாக அனுஷ்காவை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகிறது. ஆனால் இன்னும் அவர் உறுதி சொல்லவில்லை.

Post a Comment

 
Top